திரிசூலம் முதல் படைப்பா வரை.. வெள்ளிவிழா கண்ட தமிழ் சினிமா படங்களின் லிஸ்ட் இதோ..!!

By admin on ஆடி 12, 2024

Spread the love

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள் என அனைத்தும் சரியாக அமைந்தால்தான் படம் வெற்றி அடையும். இப்போது தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்கள் வெற்றியும் பெறும். முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியும் அடையும். அப்படி இருக்க திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேலாக ஓடி வெள்ளி விழா கண்ட படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Thirisoolam Superhit Tamil Movie | Sivaji Ganesan, Sripriya, K.R.Vijaya | -  YouTube

   

முதலாவதாக கே விஜயன் இயக்கத்தில் கடந்த 1979-ஆம் ஆண்டு திரிசூலம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், எம்.என் நம்பியார், ஜெய் கணேஷ், வி.கே ராமசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது.

   

திடீர் ஹீரோயின் ஊர்வசி; கோடி வசூல் முருங்கைக்காய்... `முந்தானை முடிச்சு'  ஹைலைட்ஸ்! | Nostalgia Series: Revisiting K Bhagyaraj Mundhanai Mudichu  movie - Vikatan

 

இரண்டாவதாக முந்தானை முடிச்சு திரைப்படம். இந்த படம் 1983-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கினார். முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி, பூர்ணிமா ஜெயராம், கே.கே சௌந்தர், நளினிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.

Chinnathambi film Share photo Khushboo elasticity | சின்னத்தம்பி வெளியாகி  30 ஆண்டுகள் புகைப்படம் பகிர்ந்து குஷ்பு நெகிழ்ச்சி

மூன்றாவதாக பி.வாசு இயக்கத்தில் வெளியான சின்னத்தம்பி திரைப்படம். இந்த படம் 1991 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. பிரபுவும் குஷ்புவும் சின்னத்தம்பி படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படமும் வெள்ளிவிழா கண்டு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இளையராஜாவை வைத்து எழுதப்பட்ட கதைதான் உள்ளத்தை அள்ளித்தா... காஃபி வித் காதல்  தொடர்பு தெரியுமா? | Ullathai Allitha Story Written for Illayaraja and Do  you know the connection ...

அடுத்ததாக கடந்த 1996-ஆம் ஆண்டு ரிலீசான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம். இந்த படத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தை சுந்தர் சி இயக்கினார். இந்த படமும் வெள்ளிவிழா கண்டது.

விரைவில் ரீ-ரிலீசாகும் 'படையப்பா' | Padayapa will be re-released soon

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படம். இந்த படம் 1999-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், அப்பாஸ், சிவாஜி கணேசன் நாசர் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். படையப்பா படமும் வெள்ளி விழா கண்டது.

பல வருடங்களாக புதைந்த படையப்பா ரகசியம் ! கே.எஸ் ரவிக்குமார் கூறிய உண்மை ! -  Tamil Behind Talkies