டாப் நடிகர்களுடன் கிசுகிசு, பிரேக்கப்.. நிச்சயம் வரை சென்று நடக்காத திருமணம்.. 41 வயதிலும் சிங்கிளாக சுற்றி வரும் பிரபல நடிகை..!

By Mahalakshmi on ஜூலை 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருந்து வரும் நடிகை தற்போது வரை சிங்கிளாக சுற்றி வருகின்றார். அவரைப் பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை திரிஷா. 1983 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி பிறந்தவர் திரிஷா. சென்னையில் பாலக்காட்டு ஐயர் குடும்பத்தில் பிறந்த இவர் 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக ஜோடி திரைப்படத்தில் சிம்ரன் அவர்களுக்கு தோழியாக நடித்து அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார்.

   

   

இதைத் தொடர்ந்து மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சிம்பு, சூர்யா, கமல், விக்ரம் நடித்த பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். திரிஷா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.

 

தெலுங்கிலும் முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார். பின்னர் சினிமாவில் புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் குறைந்திருந்த நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடித்து விட்டார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த காரணத்தினால் மீண்டும் தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு வருகின்றார்.

நடிகர் விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள இவர் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் கமலஹாசனின் தக் லைஃப் திரைப்படத்திலும் இணைந்திருக்கின்றார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் மூன்று பிளாக் பாஸ்டர் படங்களில் கொடுத்த காரணத்தினால் மீண்டும் தனது இடத்தை தக்க வைத்திருக்கின்றார் நடிகை திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வலம் வரும் இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை எதிர் கொண்டு இருக்கின்றார்.

பிரபல தெலுங்கு நடிகர் ராணா ரகுபதியுடன் இவர் டேட்டிங் செய்வது வருவதாக கிசுகிசுக்கள் எழுந்துவந்ததால் மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. பின்னர் இருவரும் பிரேக்கப் செய்து கொண்டனர். அதையடுத்து நடிகை திரிஷா, தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றார்.

நிச்சயம் முடிந்து சில மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தபோது அவருடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை பலரும் விஜயும் திரிஷாவும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாகவும் அடிக்கடி வெளியில் ஒன்றாக சுற்றி வருவதாக கூறியிருந்தார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் கூட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் திரிஷா. இப்படி 41 வயதான நிலையிலும் நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகின்றார்.