#image_title
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்றால் பாட்டி வந்ததால் ஒரு வழியாக அண்ணாமலையும் விஜயாவும் பேசி விட்டார்கள். பிரச்சனை சுமுகமாக முடிந்து விட்டது. தற்போது அனைவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது பாட்டி அண்ணாமலை மற்றும் விஜயாவை கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வா என்று முத்துவிடம் கூறுகிறார்.
முத்துவும் சரி என்று சொல்லிவிட்டு செல்ல உடனே மீனா நாம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது போல் இந்த செகண்ட் காரை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். அதில் மாமாவையும் அத்தையையும் கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரலாம் என்று மீனா ஐடியா கொடுக்கின்றார். காரை வாங்கிட்டு வந்து வீட்டிற்கு முன் நிறுத்துகின்றார். பின்னர் அனைவரையும் கீழே அழைக்கின்றார்.
பிறகு புது காரை பார்த்த ரவியும் ஸ்ருதியும் முத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். ஆனால் விஜயா மட்டும் எதுவும் சொல்லாமல் சந்தோஷப்படாமல் மூச்சியை தொங்கப் போட்டுக் கொண்டிருக்கின்றார். பிறகு பாட்டி இவ எப்போதும் இப்படித்தான், நீ பெருசா எடுத்துக்காத நீ இதே மாதிரி பல கார் வாங்கி நல்லா பெரிய ஆளா வரணும் என்று பாட்டி வாழ்த்துகின்றார்.
பின்னர் பின் சீட்டில் அண்ணாமலை மற்றும் விஜயாவை உட்கார வைத்து முத்து மீனா கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். போகும் போது விஜயா மற்றும் அண்ணாமலை எதுவுமே பேசாமல் தள்ளி தள்ளி அமர்ந்து வருகிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் விதமாக முத்து தாறுமாறாக வண்டியை ஓட்டுகிறார். அப்போது அண்ணாமலை விஜயாவை இருக்க பிடித்து பத்திரமாக பாதுகாக்கின்றார்.
இது ஒரு புறம் இருக்க மனோஜ்க்கு அவரின் ஷோரூமுக்கு ஒரு மொட்டை கடுதாசி வருகின்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போன மனோஜ் ரோகிணியை அழைத்து என்ன இது யார் பார்த்த வேலை என்று அதிர்ச்சியடைகின்றார். உடனே ரோகிணி இதையெல்லாம் நீ பெருசா எடுத்துக் கொள்ளாத பிராங் செய்வதற்காக இப்படி யாரோ செய்கிறார்கள் என்று கூறுகிறார்.
நீ பெருசா வளரக்கூடாது என்பதற்காக இப்படி லெட்டரை போட்டு இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். இதை பார்த்ததும் ரோகினிக்கு பயமாக இருக்கின்றது. உடனே ரோகினியின் தோழி அவரை சமாதானப்படுத்துகின்றார். இந்த மொட்டை கடுதாசியை பற்றி இரவில் மனோஜ் யோசித்துக் கொண்டே இருக்கின்றார்.
அப்போது விஜயா என்ன ஆச்சு என்று கேட்கும் போது அந்த மர்மநகர் போட்ட கடிதத்தை பற்றி கூறுகின்றார். இதைக் கேட்ட விஜயாவுக்கு மறுபடியும் ஏதாவது பிரச்சனை வரப்போகுது. தயவுசெய்து என்ன இதுல மாட்டி விட்டுடாத, ஏதா இருந்தாலும் உன் பொண்டாட்டி கிட்ட கேட்டு சரி பண்ணிக்கோ என்று விஜயா கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றார். இன்றைய எபிசோடில் இதுதான் நடக்கின்றது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…