#image_title
தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு நடிகை மாளவிகா மோகனன் 5 மருத்துவர்களை பார்த்திருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்த்து வரும் திரைப்படம் தங்கலான் பா ரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கின்றார். மேலும் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்பட்டுள்ளது.
இது திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். மேலும் இந்த திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. ஏற்கனவே படத்தின் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத்துடன் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் அந்தகன் திரைப்படமும் மோத இருக்கின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் தொடர்ந்து படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி இணைந்து ஒரு பேட்டி கொடுத்திருக்கின்றார். அதில் மாளவிகா மோகனன் பேசியதுதான் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த படத்திற்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மிகச் சிரமப்பட்டது.
எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் எனக்கான மேக்கப் என்பது பார்த்து பார்த்து செய்யப்பட்டது. தோற்றத்திற்கான மேக்கப், டேட்டூ மேக்கப் அதன் பிறகு எனது ஆடைகள் என இதற்கே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் ஒரு குடை கூட கிடையாது. மேக்கப் போடும்போது மிக ஆர்வமாக இருக்கும், நடிக்கும்போதும் மிக ஆர்வமாக இருக்கும்.
கடும் வெயில் புழுதி குப்பைகளுக்கு மத்தியில் எல்லாம் நடிக்கும் போது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் படத்தை முடித்துவிட்டு நாங்கள் ஹோட்டலுக்கு திரும்பிய பின்னர் தான் எங்களுக்கே தெரியும். கடும் வெயிலால் எங்களது உடல் மிக பாதிக்கப்பட்டுள்ளது. நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்காக என் கண்களில் லென்ஸ் போட வேண்டியிருந்தது. எனக்கு கண்களில் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் மேக்கப்பால் தோல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நான் மொத்தம் ஐந்து மருத்துவர்களை சந்திக்க வேண்டி இருந்தது” என்ற பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்திருந்தார் மாளவிகா மோகன்.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…