சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கின்றது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
நேற்றைய எபிசோடில் ஒரு வழியாக மனோஜ் நான் தான் நகையை எடுத்துக் கொண்டேன் என்று கூறி மாட்டி விடுகின்றார். பின்னர் அண்ணாமலை அவரை வெளுத்து வாங்கி விடுகின்றார். மேலும் விஜயாவை இனி என் உடன் நீ பேசக்கூடாது, உன்னிடம் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். நீ எல்லாம் ஒரு பொம்பளையா என்று கேட்டு பயங்கரமாக திட்டி விடுகின்றார்.
இதை கேட்ட விஜயா ரூமுக்குள் சென்று பூட்டிக் கொள்கின்றார். அனைவரும் என்ன ஆனது ஏதானதோ என்ற பயத்தில் கதவை தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் விஜயா கதவை திறந்த பாடு இல்லை. பின்னர் காலையில் விடிந்து விடுகின்றது. தற்போது வரை விஜயா கதவை திறக்காததால் அனைவரும் மீண்டும் கதவைத் தட்ட தொடங்குகிறார்கள்.

அப்போது ஒரு பிளான் போட்ட முத்து உடனே பார்வதி ஆன்ட்டிக்கு போன் செய்து அவரை வரவழைத்து விடுகின்றார். மனோஜ் எல்லாத்துக்கும் காரணம் நீதான் என்று கூறி அவரை குற்றம் சொல்கின்றார். உடனே முத்து பண்ற வேலையெல்லாம் நீ பண்ணிட்டு இப்ப என் மேல பலிய போடுறியா என்று இருவரும் மீண்டும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அப்போது பார்வதி ஆன்ட்டி என்ட்ரி கொடுக்க உடனே விஜயாவை அவர் அழைக்கின்றார்.
அப்போது பார்வதி ஆண்டியை விஜயா கையை பிடித்து உள்ளே இழுத்துச் சென்று விடுகின்றார். அதைத்தொடர்ந்து பார்வதி ஆன்ட்டி ஒரு வழியாக விஜயாவை வெளியில் அழைத்து வந்து விடுகின்றார். அப்போது அண்ணாமலை இடம் பார்வதி சமாதானம் செய்கின்றார். விஜயா அவரது மகன் மீது இருக்கும் பாசத்தால் எப்படி செய்துவிட்டார் தப்புதான் மன்னித்து விடுங்கள். இந்த ஒருமுறை அவளை மன்னித்து விடுங்கள் என்று கேட்கின்றார்.
உடனே பார்வதி விஜயாவிடம் அவரிடம் நீயும் மன்னிப்பு கேளு என்று கூற அவரும் மன்னிப்பு கேட்க போகிறார். அப்போது அண்ணாமலை தடுத்து நிறுத்தி என்னிடம் என் மன்னிப்பு கேட்க வேண்டும். என் நகையவா திருடி கொண்டு போய் கொடுத்தார். மீனா நகைய திருடுனது மட்டுமில்லாமல் அவ மேலயும் அவங்க அம்மா மேலேயும் பழி போட்டு அசிங்கப்படுத்தினா அவகிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று கூறுகிறார்.

உடனே மனோஜ் எனது அம்மா மீனா கிட்ட மன்னிப்பு கேட்கணுமா? என்று சொல்ல அப்ப நீ கேளு என்று முத்து கூறுகின்றார். உடனே ஸ்ருதியும் தப்பு செஞ்சது நீங்கதான் அப்ப நீங்க தான் மீனா கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று அவரும் கூறுகிறார். உடனே கோபமான விஜயா என் உயிர் இருக்கிற வரைக்கும் இந்த விஜயா உன்கிட்ட பணிந்து போக மாட்டாய் என்று கூறி அவர் கையில் இருக்கும் வளையலை கழட்டி மீனா முகத்திலேயே எரிந்து விடுகின்றார்.
இதனால் மீனாவுக்கு அழுகையே வந்து விட்டது. இன்றைய எபிசோடில் இதுதான் நடந்தது .விஜயா என்னதான் தவறு செய்தாலும் மீனாவை குறை சொல்லிக் கொண்டு அவரை அசிங்கப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார். ஆனாலும் மீனா தொடர்ந்து பொறுத்துப் போகின்றார்.
