குடோனில் சிக்கி கிட்ட ஆனந்தி.. மகேஷுக்கு போன் போடும் வார்டன்.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்க பெண்ணே..!

By Mahalakshmi on ஆடி 19, 2024

Spread the love

சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

சன் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் இன்று எப்போதுமே திட்டம் போட்டு தோற்றுப் போகும் மித்ரா இந்த முறை அரவிந்தோடு கைகோர்த்து திட்டத்தில் ஜெயித்திருக்கிறார். அரவிந்த், மித்ரா, கருணாகரன் மூவரும் விரித்த சதி வலையில் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள்.

   

   

ஸ்டாக் எடுக்க போன போது அன்பு மற்றும் ஆனந்தி குடோனுக்குள் இருக்கும் நிலையில் இருவரையும் உள்ளே வைத்து அரவிந்த் பூட்டி விடுகின்றார். மேலும் அட்டனன்ஸ் ரெக்கார்ட்டில் அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்கும் பதிலாக மித்ரா கையெழுத்து போட ஆஃபீஸ் ரெகார்ட் படி இருவரும் கம்பெனியை விட்டு வெளியில் போனதாக கணக்காகி வருகின்றது.

 

இரவு ரொம்ப நேரம் ஆகியும் ஆனந்தி ஹாஸ்டலுக்கு வராததால் அவரின் தோழிகள் அனைவரும் வார்டனிடம் சென்று கூறுகிறார்கள். ஆனந்தி இன்னும் ஹாஸ்டலுக்கு வரவில்லை அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என தோழிகள் கூற வார்டன் உடனே மகேஷுக்கு போன் போடுகிறார்.

கம்பெனியில் இருந்து இருவரும் வெளியே போனது போல் காட்டப்பட்டதால் அன்பு மற்றும் ஆனந்தி வேறு எங்கேயாவது சென்று இருப்பார்கள் என்று சந்தேகம் எழ தொடங்குகின்றது. அதிலும் மகேஷ் ஏற்கனவே அன்பும் ஆனந்தியும் நெருங்கி பழகி வருவதால் மிகுந்த கோபத்தில் இருக்கின்றார். அதனால் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டால் கண்டிப்பாக அன்புவை கம்பெனியை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்று சந்தோஷப்படுகிறார். எப்போதும் மித்ரா விரித்து வலையில் சிக்காமல் தப்பிக்கும் ஆனந்தி இந்த முறையும் தப்பிப்பாரா என்பதை வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.