பாய்ஸ் படத்துல இடம்பெற்ற அந்த பாடல் என்னுடையது… பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இசைக்கலைஞர் பகிர்ந்த தகவல்!

By vinoth on ஆடி 19, 2024

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அப்படி ரஹ்மான் ஷங்கர் கூட்டணியில் உருவான திரைப்படம்தான் பாய்ஸ். இந்த படம் பெரிய அளவில் வெற்றிப்பெறவில்லை என்றாலும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின.

   

படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் ஆடியோ கேசட்டில் இல்லாத ஆனால் படத்தில் இடம்பெற்ற பாடல் “கன்னிச்சாமி புதுசா மலையேறும் நாளப்பா” என்ற பாடல். ஒரு துணுக்குப் பாடலாக மாண்டாஜில் இந்த பாடல் இடம்பெறும். படம் ரிலீஸான போது மற்ற பாடல்களுக்கு இணையாக இந்த பாடலும் ஹிட்டானது.

 

இந்நிலையில் இந்த பாடலுக்கு ரஹ்மான் இசையமைக்கவில்லை அப்போது அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததால் தன்னை பார்த்துக் கொள்ள சொன்னதாகவும் இசைக்கலைஞர் பிரவிண் மணி சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதனால் அந்த பாடல் முழுவதையும் தான்தான் உருவாக்கினேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா ரஹ்மான் இபோது தன் குழுவில் இருக்கும் மற்றொரு கலைஞரின் ட்யூனை பாலிவுட் படம் ஒன்றுக்குக் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.