பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரோஷினி பிரியன் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பதாக பலரும் கூறுவார்கள்.
இவரின் நிறமே இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக மாறியது. பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே அந்த சீரியலில் இருந்து விலகிய ரோஷினி பின்னர் ஒரு சில ஆல்பத்தில் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். சினிமாவில் திரைப்படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வந்த இவர் கருடன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அங்கயர் கன்னியாக உண்ணி முகுந்தனுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கி வருகின்றார்.
அந்த வகையில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பாரதி கண்ணம்மா சீரியலில் பார்த்த அந்த நடிகையர் இது என பலரும் ஆச்சரியப்பட்டுப் போகும் அளவிற்கு மாடன் உடையில் பார்ப்பதற்கே செம அழகாக இருக்கின்றார்.