கேக் வெட்டி கொண்டாடிய சன் டிவியின் பிரபல சீரியல் டீம்.. ஓ இதுதான் விஷயமா..?

By Mahalakshmi on ஜூன் 17, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது வசந்தம் சீரியல் 300 எபிசோடுகளை கடந்த நிலையில் அதனை நடிகர், நடிகைகள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.

வித்தியாசமான கதை அமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை என வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் சீரியல்கள் கலக்கி கொண்டிருக்கின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களது பொழுது போக்கிற்காக சீரியல்களை கண்டு களித்து வருகிறார்கள். சீரியலுக்கு என பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான்.

   

   

இதில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கின்றது. அதற்கு அடுத்த வரிசையில் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தான் புது வசந்தம். இது திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.

 

அபியும் நானும் என்று தொடரில் நடித்த ஷியாம் ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு ஜோடியாக சோனியா சுரேஷ் நடித்திருக்கின்றார். இந்த சீரியல் கடந்த வருடம் ஜூன் 26 ஆம் தேதி முதல் மதியம் 1:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்திருக்கும் சோனியா சுரேஷ் ஒரு மாடல் மற்றும் நடிகை ஆவார்.

உப்பென்ன என்கின்ற தெலுங்கு சீரியல் மூலம் பிரபலமான இவர் அதைத் தொடர்ந்து சன் டிவியில் புது வசந்தம் என்ற சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி இருக்கின்றார். இந்நிலையில் இந்த சீரியலில் அமர்தீப் சவுத்ரி மற்றும் பூஜா மூர்த்தி, சாந்தி வில்லியம்ஸ், வைஷ்ணவி நாயக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள்.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இதனை அந்த சீரியல் பிரபலங்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.