இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறு வயது பிரபலம் யாருன்னு தெரியுதா..? எங்க கண்டுபிடிங்க..!

By Mahalakshmi on ஆனி 17, 2024

Spread the love

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பூஜாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. அதிலும் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்து போனாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பல ஆண்டுகாலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகின்றது.

   

   

இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளில் ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி மூலமாக பல பிரபலங்கள் வெள்ளித் திரையில் பாடல்களை பாடி இருக்கிறார்கள். சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியை விட மழலை குரலில் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும். பல வருடங்களாக இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ் பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

 

மேலும் இந்த நிகழ்ச்சிகளுக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண், உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களாக இருந்து வருகிறார்கள். சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது பாடல் மூலமாக மிக பிரபலமானவர் பூஜா. தனது பாடலால் இவர் வரவேற்பு பெற்றதை விட டிஜே பிளாக் மற்றும் பூஜாவின் காமெடி, காதல் சீக்குவன்ஸ் மூலமாக மிக பிரபலமானார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு அசதி வருகின்றார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது” தனக்கு 8.5 வயது இருக்கும்போது என் தந்தை என்னை விட்டு சென்று விட்டார். அம்மாவுடன் நான் கடினமான வழியில் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கற்றுக் கொண்டேன்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Venkat (@v___pooja)

நிச்சயமாக அவருடன் எங்களது வாழ்க்கை இருந்திருந்தால் மிக வித்தியாசமாக இருந்திருக்கும். அனைத்துமே எனக்கு எளிதில் கிடைத்து விட்டிருக்கும். ஆனால் தற்போது வாழும் கடினமான வாழ்க்கையை நான் வாழ்ந்து இருக்க மாட்டேன். அம்மாவும் நானும் எவ்வளவோ போராடி இருக்கிறோம். நாங்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதையும் பழகிக்கொண்டோம்” என தனது தந்தை இல்லாத கஷ்டத்தை மிகவும் உருக்கமாக எமோஷனலாக பகிர்ந்து இருந்தார் பூஜா. மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இது யார் என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.