Connect with us

பிரபல தொழிலதிபரை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!!! 

CINEMA

பிரபல தொழிலதிபரை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை…. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!!! 

 

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்து வரும் ஹர்ஷலா என்பவருக்கு தற்போது திருமணமாகி இருக்கின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.

   

இந்த சீரியலில் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். இவர்களுடன் ஆர் சௌந்தரராஜன், அணிலா, நரசிம்மராஜு, தமிழ் செல்வி, ரேவதி, திவாகர், ஸ்ரீதேவா என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹர்ஷலா.

இவர் சன் டிவியின் சந்திரலேகா தொடரில் நடித்து பிரபலமான நடிகை. இதைத் தவிர பிருங்கதா பென்னேரிநானு மாட்டு நானுசுக்கிவரஸ்தாராரோபோ ஃபேமிலிசஞ்சு மாட்டு மற்றும் காவேரி போன்ற பல கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் கணவனை அறிமுகப்படுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து தன்னுடைய திருமண புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். புதுமண தம்பதிகளுக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் கோமதி பிரியா, வெற்றி வசந்த், தமிழ் செல்வி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். இவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Yours Honey (@yours_harshala_honey)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top