விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறு சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனும் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் எதிர்பார்த்த காதல் சம்பவமும் அரங்கேறி வருகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து எழுத்தாளரும் நடிகருமான பாவா செல்லதுரை உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறி விட்டார். தற்பொழுது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள் இரண்டு நாமினேசன் என வித்தியாசமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் டாஸ்க் பங்கேற்கவும், ஸ்மால் பாக்ஸ் என்ற வீட்டில் இருக்கும் நபர்கள் சமைத்துக் கொடுப்பதும்என்று இருந்து வருகின்றது. இந்த இரு வீட்டுக்குள் இருக்கும் நபர்கள் மாறி மாறி சண்டையிட்டு கொள்கிறார்கள்.

இந்த இரண்டு வீட்டுக்கு இடையில் சிக்கிக் கொண்டு சரவணன் விக்ரம் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார். இரு வீட்டுக்கும் அவர் சமாதானம் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று மாயா, பூர்ணிமா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பூர்ணிமா தனக்கு ஒருவர் மீது கிரஷ் இருப்பதாகவும் ஆனால் அவர் வேறு யாருடன் ஆவது ரிலேஷன்ஷிப்பில் இருப்பாரோ என்று தோன்றுகிறது.

இருந்தாலும் அவரை எனக்குப் பிடித்திருக்கு என்று கூறிக் கொண்டிருந்தார் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் ரவீனா மற்றும் மணி என காதல் ஜோடி இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதாக சரவணன் விக்ரம் மற்றும் பூர்ணிமா ஜோடி உருவாகியுள்ளது. இனி அடுத்து வரும் சீன்களில் இவர்கள் இருவரின் காதல் காட்சிகளை நம்மால் பார்க்க முடியும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
