நடிகை பாப்ரி கோஸ் பெங்காலி மற்றும் தமிழ் திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் டிவி சீரியல்களில் அதிகமாக நடித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு கௌதம் கோஸ் இயக்கிய கால்பேலா என்ற பெங்காலி திரைப்படத்தின் மூலம் பாப்ரி கோஸ் திரையுலகில் அறிமுகமானார்.

இதனையடுத்து கோஸ் சங்கர் ரே இயக்கிய க்ரோத் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாப்ரி பிரபலமானார். அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாப்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். பின்னர் தமிழ் சீரியல்களில் பாப்ரி நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் பாப்ரி கோஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பாப்ரி கோஸ் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் பாப்ரி பகிர்ந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

