தங்க சிலை மாதிரி இருக்கீங்களே..! சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கட்டி இழுக்கும் தமன்னா.. வைரலாகும் போட்டோஸ்..!!

By admin on ஐப்பசி 12, 2023

Spread the love

முன்னணி நடிகையான தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தி திரைப்படமான சந்த் சா ரோஷன் செஹ்ரா மூலம் தமன்னா தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். தமிழ் சினிமாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமன்னா அறிமுகமானார். முக்கியமாக கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பாக அங்கீகாரத்தை கொடுத்தது.

   

இதனை தொடர்ந்து கார்த்தியுடன் பையா, சிறுத்தை தனுசுடன் படிக்காதவன், விஜயுடன் சுறா, சூர்யாவுடன் அயன் உள்ளிட்ட வெற்றி படங்களில் தமன்னா நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு தமன்னா குத்து டான்ஸ் ஆடினார்.

   

 

இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் இருக்கும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது தமன்னா ஹிந்தி வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது சேலை கட்டி தமன்னா வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.