#image_title
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று கோமதி கேட்டுக்கொண்டதால் பாண்டியன் தனது மூன்று மகன்களையும் அவர்களின் பொண்டாட்டிங்களுடன் ஹனிமூன் செல்வதற்கு சம்மதிக்கின்றார். கோமதிக்கு ஒரே சந்தோஷம். அடுப்பங்கரையில் பாட்டு பாடிக்கொண்டே சமையல் செய்கின்றார். வந்த பாண்டியன் கோமதியிடம் பாசமாக பேசுகின்றார்.
இதையடுத்து மூன்று பேரும் ஒரே இடத்திற்கு செல்லுங்கள் என்று கூற தங்கமயில் சென்னைக்கு போகலாம் என்கின்றார். ஆனால் மீனாவுக்கும் ராஜிக்கும் அதில் விருப்பமே இல்லை. தங்க மயிலுக்கும் ராஜியும், மீனாவும் அவர்களுடனே வருவது சுத்தமாக பிடிக்கவில்லை. இதையடுத்து ரூமுக்கு சென்ற சரவணன் மிக மகிழ்ச்சியாக தம்பிகளுடன் ஹனிமூன் செல்வது குறித்து யோசித்து கொண்டு இருக்கின்றார் அப்போது வந்த தங்கமயில் அவரிடம் பேசுகின்றார் தனித்தனியாக செல்லலாமே ஒன்றாக சென்றால் பிரைவசியே இருக்காது என்று கூறுகின்றார்.
தம்பிகளுடன் நம்ம எல்லாரும் போனா ஜாலியா இருக்கும் என்று சரவணன் கூறுகின்றார். நானும் என் தம்பிகளும் சின்ன வயசுல வெளியூர் போனது. இப்ப ஒரு சான்ஸ் கிடைச்சு இருக்கு. அதனால செம ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரலாம் என்று சந்தோஷ்மாக சரவணனிடம் கூறுகிறார். தங்கமயில் ஒருவேளை நம் கூட வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று கேட்க, மாமாவுக்காக சரி என்று கூட சொல்லி இருக்கலாம்.
அதனால் நம்ம மட்டும் தனியா போகலாம் என்று கேட்கின்றார். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல தம்பிகள் அப்படி நினைக்க மாட்டாங்க என்று கூறுகின்றார். அடுத்ததாக மீனா மட்டும் செந்தில் இருவரும் ஹனிமூன் போக வேண்டாம். அதுவும் சென்னை அந்த அளவுக்கு செட்டாகாது. இப்போது மழை தான் அங்கு அதிகமாக இருக்கு அது மட்டும் இல்லாமல் நம்ம போனால் தங்க மயிலுக்கும் சரவணன் மாமாவுக்கும் தொந்தரவாக இருக்கும்.
நம்ம இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று மீனா சென்ற இடம் கூறுகின்றார். உடனே செந்திலும் சரி நம்ம போக வேண்டாம் என்று கூறுகின்றார். அப்பாவிடம் காலையில் பேசிக்கொள்ளலாம் என கூறுகிறார். இது ஒரு புறம் இருக்க ராஜியும் இப்பதான் டியூஷன் எடுக்க ஸ்டார்ட் பண்ணி இருப்போம் அது கூட லீவு போட்டா எப்படி என்று யோசிக்கின்றார். அது சென்னைக்கு போகாம இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்.
கதிர் வந்தவுடனே உனக்கு சென்னைக்கு போக பிடிக்கலையா என்று கேட்கிறேன். ஆமா எனக்கு போக தோணல என்று சொல்லிய நிலையில் கதிரும் எனக்கும் போக இஷ்டமில்லை என கூறுகின்றார். உடனே இல்ல உனக்கு ஒரு வேலை ஆசையா இருந்துச்சுன்னா அது என்னால தடைப்பட்டு போய் விடக்கூடாது. அதான் நான் கேட்டேன் என்று ராஜி சொல்ல இருவரும் போக வேண்டாம் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.
மறுநாள் பாண்டியனிடம் மீனா மாமா எனக்கு இப்போதைக்கு லீவு கிடைக்காது. அதனால் நான் சென்னைக்கு போகவில்லை என்று சொல்கின்றேன். அதே போல எக்ஸாம் இருந்தாலே என்னால லீவு போட முடியாது அதனால நானும் போகவில்லை என்று ராஜியும் சொல்ல பாண்டியன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதை வைத்து கண்டிப்பாக தங்கமயில் பிரச்சனை பண்ணும் விதமாக சரவணன் இடம் கூட அவர்களுக்கு வர இஷ்டம் இல்லாததால் தான் வரவில்லை என்று மாமாக்கு இடம் கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் தம்பி வருகிறார்கள் என்று பாசத்தில் சந்தோஷப்படுகிறீர்கள். உங்களுடைய பாசம் கொஞ்சம் கூட அவங்களுக்கு இல்லை என்று சரவணன் மனதில் தம்பிகளை குறித்து தவறான விஷயத்தை பதிவு செய்கிறார் தங்கமயில்.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…