Categories: சினிமா

கண்ணா 3 லட்டு திங்க ஆசையா..! சர்தார் 2 திரைப்படத்தில் இணையும் டாப் 3 நடிகைகள்.. யாரெல்லாம் தெரியுமா..?

Spread the love

2022 ஆம் ஆண்டு பி.எஸ் மித்ரன் எழுத்து இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வெளியானது. இப்படம் எஸ் லட்சுமணன் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராசி கண்ணா, ரதிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், யூகி சேது ,அவினாஷ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகை லைலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகத்திற்கு வந்து அருமையாக நடித்துள்ளார். இப்படத்தின் மொத்த வருவாய் 100 கோடி ஆகும். 2022 இல் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலிக்கப்பட்ட பட்டியலில் இதுவும் ஒன்று.

இப்படம் மக்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பிஎஸ் மித்ரன் இரண்டாவது பாகத்தை எடுக்க முன் வந்தார். இந்தப் படத்திற்கும் கார்த்தி சம்மதம் தெரிவித்ததனால் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது.கடந்த மாதம் 12ஆம் தேதி இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. மேலும் 15 ஆம் தேதி படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு தொடங்கிய அடுத்த நாள் அதாவது ஜூலை 16 ஆம் அன்று படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றியுள்ள ஸ்டன்ட் மாஸ்டர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டது. உயிரிழந்த ஏழுமலை வீட்டிற்கு கார்த்தி சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு பிரசாந்த் ஸ்டூடியோவில் இந்த படப்பிடப்பு மிகவும் வேகமாக அதே நேரத்தில் மிகவும் கவனமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் மூன்று கதாநாயகிகளா என்று மக்களுக்கு இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்தார் 2 படத்தின் மூன்று கதாநாயகிகள் அதாவது பிரியங்காமோகன்,மாளவிகாமோகன் மற்றும் ஆஷிக்க ரங்கநாத் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா அருள் மோகன் ஏற்கனவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களை நடித்துக் கொண்டிருக்கிறார் .இவர் தனுஷ் உடன் இணைந்து கேப்டன் மில்லர் போன்ற படத்தை நடித்து உள்ளார்.

மாளவிகா மோகன் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் இப்போது தங்களான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதை அடுத்து ஆஷிக் ரங்கநாத் கன்னட திரைப்படத்தின் நடிகை இந்த திரைப்படம் மூலமாக தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகம் ஆகிறார். இந்த மூன்று நடிகைகளும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Keerthana

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

45 seconds ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

10 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

19 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

29 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

39 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

44 minutes ago