Categories: சினிமா

அந்த டயலாக்கை சொல்ல 2 நாள் ஹோம் வொர்க் செய்த விஜய்.. அதனால்தான் ஒரே டேக்கில் முடிச்சேன்.. அவரே சொன்ன தகவல்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்ததால் தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

#image_title

வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து இரண்டு பாடல்களும் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் நண்பன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சங்கர் இயக்கினார்.

மேலும் ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். ஹிந்தியில் ரிலீசான 3 இடியட்ஸ் என்ற படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் அந்த புக் சீன் இடம் பெற்றுள்ள டயலாக்கை ஒரே டேக்கில் பேசி முடிச்சிட்டீங்கன்னு சொன்னாங்க. அது எப்படி என கேள்வி கேட்டார்.

அங்கிருந்த ஸ்ரீகாந்த், இயக்குனர் சங்கர் ஆகியோரும் ஆமா எதுநாளும் விஜய் ஒரே டேக் தான். சீக்கிரமா பேசி முடிச்சிடுவாரு என கூறுகிறார்கள். அதற்கு பதில் அளித்த விஜய் ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னாடி அந்த சீன் வரும் என்பது எனக்கு தெரியும். அந்த சீன் பேப்பரை வாங்கிட்டு போனேன் வீட்டில் வைத்து இரண்டு நாள் மனப்பாடம் பண்ணி ஒரே டேக்கில் முடிச்சேன் என கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

“அந்த பேரு கூட பொய் தான்..” இன்ஃப்ளூயன்சர் பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய கொடூரன்… ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை… டெல்லியில் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…

5 minutes ago

“அப்பா என்னை காப்பாத்துங்க…” மரணத்தின் விளிம்பிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நெஞ்சை பிளக்கும் லக்னோ விபத்தின் சோக சம்பவம்….!

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…

11 minutes ago

“மொபைல் போனில் வந்த ‘அந்த’ புகைப்படம்”… திருமண வீட்டை மரண வீடாக மாற்றிய சைபர் சைக்கோ…. மகளுடன் சேர்ந்து விஷம் குடித்து உயிரை மாய்த்த பெற்றோர்…!

மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…

20 minutes ago

634 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செக் வைத்த விஜய் அரசு… ஜூலை 10-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…

28 minutes ago

அதிமுக-வை அசிங்கப்படுத்திய விஜய்.. கோபப்படாமல் ‘நைஸ் ஸ்பீச்’ சொன்ன வேலுமணி… ஒரே நாளில் மாறிய தமிழக அரசியல் களம்….!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…

38 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” நடுவானில் கொழுந்துவிட்டு எரிந்த ஹாட் ஏர் பலூன்.. பிரேசிலில் 8 பேர் உடல்கருகி பரிதாப பலி – பதைபதைக்க வைக்கும் பகீர் விபத்து..!!

பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…

41 minutes ago