Categories: சினிமா

பார்த்திபன் நம்ம சொல்றத கேட்க மாட்டாரு.. டீன்ஸ் படம் சுத்தமா கலெக்ஷனே போகல.. உண்மையை உடைத்த திருப்பூர் சுப்பிரமணியம்..!!

Spread the love

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 1989-ஆம் ஆண்டு ரிலீசான புதிய பாதை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுகமான சுமைகள், சரிகமபதநி, புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ் ஃபுல், இவன், பச்சை குதிரை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்பவும், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி டீன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 13 இளம் வயதினரை மையமாக வைத்து சாகசம் நிறைந்த திரில்லர் கதையாக டீன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் டீன்ஸ் திரைப்படம் சுமாரான கலெக்ஷனை பெற்றுள்ளது. இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திருப்பூர் சுப்பிரமணியம் டீன்ஸ் படத்தின் கலெக்ஷன் ரொம்ப சுமாரா தான் இருந்துச்சு. அவரு புரிஞ்சுக்கவே மாட்டாரு. முதல்லயே பார்த்திபன் எனக்கு போன் பண்ணி பேசினாரு ரிலீஸ்க்கு முன்னாடி.

இந்த மாதிரி படத்தை இந்த டேட்ல ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்னு சொன்னாரு. நான் அவர்கிட்ட வேண்டாம் சார். ஒரு வாரம் கழிச்சு பண்ணலாம் நமக்கு நல்ல ஓபனிங் கிடைக்கும். அதே தேதியில் ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகுது. அந்த படத்தோட டீன்ஸ் படத்தை ரிலீஸ் பண்ணினால் ஒரு சரியான ஓபனிங் கிடைக்காது சார் அப்படின்னு சொன்னேன். அவரு கேட்கவே இல்லை. அவரு நம்ம சொல்றத கேட்க மாட்டாரு. கண்டிப்பா அந்த தேதியில் டீன்ஸ் படத்தை ரிலீஸ் பண்ணது ரொம்ப தப்பு தான். அவரு நான் புதிய பாதை படத்தை அப்படித்தான் ரிலீஸ் பண்ணினேன்னு சொன்னாரு.

ஒரு 40 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததை பத்தி இன்னைக்கு பேசி பிரயோஜனம் கிடையாது. அன்னைக்கு தீபாவளி பொங்கல்னா ஒரே நாளில் முன்னணி நடிகர்களோட ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகும். அன்னைக்கு 4500 தியேட்டர் தமிழ்நாட்டுல இருந்துச்சு. ஆனா இன்னைக்கு நம்பர் ஆப் ஸ்க்ரீன்ஷு 1500 கிட்ட தான் இருக்குது. தியேட்டர் கணக்கு 500 தான் இருக்குது. இப்போ ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும் போது அந்த படத்தை தான் தியேட்டர்ல போடுவாங்க. அதே டைம்ல நீங்களும் ரிலீஸ் பண்ணா ஷோவும் கிடைக்காது. அவங்க சொல்றத கேட்காம பெரிய படத்தோட ரிலீஸ் பண்ணிடுறாங்க. அப்புறம் தியேட்டர் காரங்களால தான்னு சொல்லுறாங்க என ஓப்பனாக பேசியுள்ளார்.

admin

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

23 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

24 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

37 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago