‘பஞ்சுமிட்டாய் சேலை கட்டி’.. அமெரிக்காவில் நெப்போலியன் வீட்டில் ஆட்டம் போட்ட மாகாபா மற்றும் டிஜே பிளாக் .. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on ஜூன் 11, 2024

Spread the love

அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் வீட்டில் டிஜே பிளாக் மற்றும் மாகாபா ஆனந்த் லூட்டி அடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஜே பிளாக் பகிர்ந்து இருக்கின்றார்.

80ஸ் காலகட்டத்தில் பிரபல வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்த அசத்தியவர் நெப்போலியன். அதிலும் அவர் நடித்த பல திரைப்படங்கள் தற்போது வரை நல்ல வரவேற்பு பெற்றுள்ளது . சீவலப்பேரி பாண்டி படத்தில் தன்னுடைய நடிப்பை நிஜம் என நம்பி பல ரசிகர்கள் அவருக்கு ரசிகர் மன்றமே தொடங்கினார்கள்.

   

   

அதுபோல எட்டுப்பட்டி ராஜா திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ‘பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடல்’ இப்போது வரைக்கும் மிகப்பெரிய ஹிட்டாக இருந்து வருகின்றது. நெப்போலியன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 2009 ஆம் ஆண்டு நடிப்பை விட்டு விட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். ஒரு முறை எம்எல்ஏவாகவும் இருந்த இவர் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார்.

 

இந்நிலையில் எட்டுப்பட்டி ராசா படத்தில் வரும் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு நடிகர் நெப்போலியன் தனது வீட்டில் பாட்டு பாடி இருக்கிறார். அப்போது நெப்போலியன் வீட்டிற்கு சென்றிருக்கும் டிஜே பிளாக் மாகாபா ஆனந்த் மற்றும் அவரின் நண்பர்கள் அனைவரும் பாட்டு பாடி டான்ஸ் ஆடி இருக்கிறார்கள்.

டிஜே பிளாக் தலைமையில் ஒரு பார்ட்டி நடைபெற்று இருக்கின்றது. அந்த பாட்டில்தான் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலை பாடி ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி இருக்கின்றார்கள். இந்த வீடியோவை டிஜே பிளாக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தனது மகனுக்காக அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கும் நெப்போலியன் 70-க்கும் மேற்பட்ட வேலை செய்து வருகின்றார். மேலும் நெப்போலியன் மகன் தனுஷை பார்ப்பதற்காக விஜய் டிவி பிரபலமான மாகாபா ஆனந்த் மற்றும் டிஜே பிளாக் அமெரிக்காவிற்கு சென்று இருக்கிறார்கள். அங்கிருந்து வெளியான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது.