வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.
இப்போது போஸ்ட் புரொடக்சன் மணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரிஷா, சிவகார்த்திகேயன், மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கோட் திரைப்படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரு கதாபாத்திரத்தில் காண்பிக்க உள்ளனர். மகன் விஜய்க்கு டி ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்துடன் உருவான கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு விஜய் உள்ளிட்ட பட குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றனர். இந்த நிலையில் அப்பா மற்றும் மகன் விஜய் சண்டை போடும் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அப்பா மற்றும் மகன் விஜய் இருவரும் ஆக்சன் களத்தில் சண்டை இடுவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆங்காங்கே வைக்கப்படும் வெடிகுண்டுகளை அகற்றுவதற்காக அப்பா விஜய் களமிறங்குகிறார்.
இதே நேரம் விஜய் மற்றும் மைக் மோகன் இடையே அதிரடி சண்டை காட்சிகளும் இடம் பெறுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அப்பா விஜயம் மகன் விஜய்யும் வெறித்தனமாக மோதுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். வருகிற 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் படக்குழுவினர் கூறியுள்ளனர். அதே நாளில் நாளில் தான் தளபதியின் 69 ஆவது பட அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.