பார்வையற்ற அம்மா, தங்கை.. மனநலம் குன்றிய அண்ணன்.. நம்பிக்கை மட்டும் இருக்கும் குடும்பத்திற்கு மிகப்பெரிய உதவி செய்த அறந்தாங்கி நிஷா…

By Begam on சித்திரை 16, 2024

Spread the love

தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பெண்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி ஷோவில் செய்யும் காமெடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு கிடைக்கும். சின்னத்திரை தான் இப்போது மக்களின் பெரிய பொழுதுபோக்காக உள்ளது. இவர் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து பிரபலமானார்.

   

‘சின்னத்திரை நயன்தாரா’ என தன்னை பாசிட்டிவாகவே கூறிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது  தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

   

KPY Bala

 

நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். அழகிய ஜோடியான இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரும் KPY பாலாவை போன்றே ஏழ்மையில் வாடுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.  சென்னை மக்கள் மிக்ஜாம் புயலில் சிக்கி தவித்த போது அவர்களுக்கு தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்தார்.

அதுபோல தற்பொழுது அவர் பார்வையற்ற அம்மா, தங்கை,  மனநலம் குன்றிய அண்ணன் என நம்பிக்கையை மட்டும் கொண்டு குடும்பத்தை வழி நடத்தி செல்லும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். அவரின் இந்த செயலை மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)