அடடே…. ஐஸ்வர்யா ராய் பாட்டை, ஐஸ்வர்யா ஷங்கருக்கு வழங்கிய வைரமுத்து.. வைரலாகும் ட்விட்டர் பதிவு…

By Begam on சித்திரை 16, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராகவும், கவிஞராகவும் வலம் வந்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் ஆறு முறை தேசிய விருதும், கலை மாமணி விருதும், பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவியரசு, கவிப்பேரரசு போன்ற பட்டங்களையும் பெற்றவர். 80ஸ் தொடங்கி தற்பொழுது வரை வைரமுத்து அவர்களின் வரிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றனர்.

   

இவர் இயற்றிய பல பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.  தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார். இதுமட்டுமின்றி அவ்வப்பொழுது இவர் செய்யும் ஒரு சில செய்கைகள் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது.

   

 

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு நேற்று இரண்டாவது திருமணம் நடைபெற்றது. உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் ஷங்கர். இத்திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சியான் விக்ரம், சூர்யா, கவிஞர் வைரமுத்து உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தற்பொழுது கவிஞர் வைரமுத்து திருமண விழாவில் மணமக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர்  பக்கத்தில் பகிர்ந்து, ‘அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன். உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு, உயிருக்கு உயிரால் உறையிடுவேன். பால்வண்ணப் பறவை குளிப்பதற்காகப் பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்’  என  ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற அவர் எழுதிய ஐஸ்வர்யா ராய் பாட்டை, ஐஸ்வர்யா ஷங்கருக்கு வாழ்த்தாக வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் தற்பொழுது வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பதிவு…