முரளிக்காக சுந்தர்ராஜன் எழுதிய கதையில் எதிர்பாராதவிதமாக நடித்த விஜயகாந்த்… திருப்புமுனையா அமையும்னு அவரே நெனச்சிருக்க மாட்டாரு!

By vinoth

Published on:

vijayakanth and sunderrajan

கோவையை சேர்ந்தவர் ஆர். சுந்தர்ராஜன். டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் 80 களில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். இயக்குனர் பாக்யராஜும் இவரும் கல்லூரி தோழர்கள். பயணங்கள் முடிவதில்லை என்ற சில்வர் ஜூப்ளி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் சுந்தர்ராஜன்.

அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், ராஜாதி ராஜா போன்ற படங்களை இயக்கி தன்னை முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். அமைதிப்படை, சூர்யா வம்சம், தசாவதாரம், நட்புக்காக, ஜானகிராமன், லிங்கா என பல படங்களில் அப்பா, அண்ணன், தாத்தா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

   

80 களில் வரிசையாக இவர் ஹிட் படங்களாக கொடுத்ததால் அனைத்து நடிகர்களும் விரும்பும் இயக்குனராக இருந்துள்ளார். இவர் அதிகமாக மோகன் மற்றும் விஜயகாந்த் ஆகியோரை வைத்துதான் படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த்- சுந்தர்ராஜன் கூட்டணியில் உருவான படங்கள் பெரும்பாலானவை ஹிட் படங்களாக அமைந்தன.

அப்படி 1986 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்தான் ‘அம்மன் கோவில் கிழக்காலே’. இந்த படத்தில் விஜயகாந்த் மற்றும் ராதா ஆகியோர் இணைந்து நடிக்க இளையராஜா இசையில் பாடல்கள் பட்டி தொட்டி ஹிட். அதனால் படமும் 200 நாட்களைக் கடந்து ஓடியது. அப்போது சில படங்கள் வரிசையாக தோல்விப்படங்களாக விஜயகாந்துக்கு அமைந்தன. அதில் இருந்து ஒரு திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

ஆனால் இந்த படத்தில் முதலில் அவர் விஜயகாந்தை நடிக்க வைக்க விரும்பவில்லையாம். முதலில் முரளி, ரேவதி ஜோடி தான் நடிப்பதாக இருந்ததாம். இதற்காக முரளியிடம் பேசி அவருக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டதாம். ஆனால் அப்போது முரளி ஒரு கன்னடப் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த படத்துக்கு தேவையான தேதிகளை ஒதுக்க முடியவில்லையாம். அதனால் ஏற்கனவே தன் படத்தில் நடித்த விஜயகாந்தை அணுகி அவரை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்ராஜன். இப்படி எதிர்பாராமல் வந்த வாய்ப்பு இன்றளவும் விஜயகாந்தின் கேரியரில் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என விஜயகாந்தே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.