TRP ரேட்டிங்கில் கெத்து காட்டிய ‘சிறகடிக்க ஆசை’.. இந்த வார டாப் சீரியல்களின் லிஸ்ட் இதோ..!

By Mahalakshmi on சித்திரை 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வெள்ளி திரைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவுக்கு சின்னத்திரைக்கும் இருக்கின்றது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். குடும்பப் பெண்கள் பொதுவாக சீரியல்களை அதிகளவில் பார்த்து வருகிறார்கள். இந்த வருடத்தில் 15 வது வாரத்தில் டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்களை பற்றி பார்ப்போம்.

   

இந்த வாரத்தில் முதல் இடத்தை பிடித்திருக்கும் சீரியல் சிங்க பெண்ணே இந்த வாரம் 9.2 டிஆர்பி புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கின்றது இந்த சீரியல். இரண்டாவது இடத்தில் கயல் சீரியல் 8.91 புள்ளிகளுடன் இருக்கின்றது. மூன்றாவது இடத்தில் எதிர்நீச்சல் இந்த சீரியல் 8.27 டிஆர்பி ரேட்டிங் உடன் இருக்கின்றது. இடைத்தொடர்ந்து சிறகடிக்க ஆசை சீரியல் 6.79 டிஆர்பி ரேட்டிங் உடன் நான்காவது இடத்தை பிடித்திருக்கின்றது.

   

 

ஐந்தாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல்.ஆறாவது இடத்தில் இனியா சீரியல். ஏழாவது இடத்தில் சுந்தரி சீரியல் இருக்கின்றது.எட்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்திருக்கின்றது. ஒன்பதாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர் சீரியலும் பத்தாவது இடத்தை சின்ன மருமகள் சீரியலும் தக்க வைத்துள்ளன டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடத்தை பிடித்த சீரியல் இதுதான்.