3 வருடம் மட்டுமே நிலைத்த திருமண வாழ்க்கை.. விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி..!

By Mahalakshmi on சித்திரை 22, 2024

Spread the love

விஜய் டிவியின் தொகுப்பாளர் என்று கூறினால் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது திவ்யதர்ஷினி என்கின்ற டிடி தான்.இவர் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வந்தார். தற்போது தனிப்பட்ட காரணத்தினால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.விவாகரத்து உடல்நல பிரச்சனை என பல சவால்களை சந்தித்து வருகிறார்.

   

இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார். இது குறித்து பலரும் கேள்வி கேட்ட போதிலும் அமைதி காத்து வந்த டிடி தற்போது தனது விவாகரத்து குறித்து மனம் திறந்திருக்கின்றார். திருமணம் என்பது வாழ்க்கையுடைய முடிவு கிடையாது.

   

 

திருமணம் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது.அது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் அந்த முடிவு யாரையும் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.விவாகரத்து என்று முடிவு எடுத்தபோதும் நான் என்னுடைய சந்தோஷத்தை மட்டுமே யோசித்தேன். விவாகரத்து உறுதியாகும் சமயத்தில் நான் ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுக்க.

அந்த சமயம் நான் அனுபவித்த வலியும் வேதனையும் எனக்கு தான் தெரியும் என் மனதிற்குள் எல்லாமே முடிந்து விட்டது என்று தோன்றியது. விவாகரத்து என்பது எதிர் தரப்பில் இருப்பவரை விட என்னை அதிகமாக பாதித்தது.நான் மீடியா வெளிச்சத்தில் இருந்தேன்.அதனால் பல விளைவுகளை நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று பேசி இருந்தார் டிடி.