விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல்தான் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கின்றது. ஒரு குடும்பத்திற்கு வாக்கப்பட்டு வரும் மூன்று மருமகள்களை வித்தியாசம் பார்க்கும் மாமியார்.இரண்டாவது மருமகள் மீனா ஏழை என்பதால் அவரை மட்டம் தட்டியும்.
மற்ற இரண்டு மருமகள்களும் பணக்கார வீட்டுப் பெண் என்பதால் அவர்களை உயர்த்தி வைத்தும் பேசி வருகிறார் மாமியார். இதை கொண்டு தான் இந்த சீரியலின் கதைக்களம் இருக்கின்றது. இதில் மீனா முத்துவின் நடிப்பு மற்றும் கெமிஸ்ட்ரி இந்த சீரியலை வரவேற்க மற்றொரு காரணம். இந்த சீரியலில் ஹீரோயின் மீனாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சங்கீதா.
இவர் அந்த சீரியலில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவரது நிஜவேலை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நடிகை சங்கீதா டாக்டர் படிப்பை முடித்துவிட்டு வேலை பார்த்துக் கொண்டே நடிப்பு மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சீரியல்களில் நடித்து வருகிறாராம்.இவர் டாக்டர் என்பது பலருக்கும் ஆச்சரியமான தகவலாக இருக்கின்றது.