பிரபல விஜே ஒருவர் தொகுப்பாளினி டிடியை ஒருதலையாக காதலித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஆங்கர்களில் ஒருவராக இருந்தவர் திவ்யதர்ஷினி. விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியாக வளம் வந்த இவர் சிறு வயது முதலே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றார். சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் .தொகுப்பாளனியாக பணியாற்றி வந்த இவர் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.
தான் இருக்கும் இடத்தை மிக கலகலப்பாக வைத்துக் கொள்ளும் பிரபலம் திவ்யதர்ஷினி. குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் இவர் கேள்வி கேட்பது பேசுவது என அனைத்துமே மிக அழகாக இருக்கும். அதிலும் விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி காபி வித் டிடி இந்த நிகழ்ச்சி முதலில் காபி வித் அனு என்ற பெயரில் நடைபெற்று வந்தது.

அதன் பிறகு டிடி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க காபி வித் டிடி என்று பெயரை மாற்றினார்கள். இதில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். திவ்யதர்ஷினி சில வருடத்திற்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த இரண்டு வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்வில் முடிவுக்கு வந்தது.
இருவரும் விவாகரத்து பெற்று பிறந்தனர். தற்போது பெரிய நடிகர்களின் ஆடியோ லான்ச் இசை வெளியீட்டு விழா போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகின்றார். அதிலும் இவருக்கு காலில் சில பிரச்சினைகள் இருந்த காரணத்தால் அமர்ந்து கொண்டு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். தற்போது வரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகின்றார் டிடி.

இந்நிலையில் டிடி குறித்து விஜே ரமேஷ் நல்லயன் ஒரு சில விஷயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “எனக்கு தொகுப்பாளர்களில் சிவகார்த்திகேயன் மற்றும் டிடி என இருவரையும் மிகவும் பிடிக்கும். ஜோடி நிகழ்ச்சியை எனது நண்பர் தான் தயாரித்திருந்தார். அதனால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அடிக்கடி செட்டுக்கு போவேன், என்னுடைய நண்பர்களும் அங்கு நிறைய பேர் இருந்தார்கள்.
டிடியை முதன் முதலில் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு இருவரும் நல்ல நட்பாக பழகி வந்தோம். அவரிடம் காதலை சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வார் என்ற பயம் இருந்தது. அதனால் நிறைய நாட்கள் காதலை சொல்லாமலேயே இருந்து வந்தேன். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காதலை சொல்லலாம் என்று சென்றபோதுதான் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்தது.

இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு நல்ல பெண்ணை தவறவிட்டு விட்டோமே என்று மிகவும் கவலைபட்டேன். அவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்து கூட நடந்தது. ஆனால் அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இல்லை. அவரிடம் இதுவரை என்னுடைய காதலை சொல்லவும் இல்லை” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
