தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் 90 களில் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
அப்படி பரிசோதனை படங்களாக எடுத்து கமல் கையை சுட்டுக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அவரின் போட்டியாளரான ரஜினிகாந்தோ அசால்ட்டாக பெரிதா எந்த மெனக்கெடுதல்களும் இல்லாமல் தன்னுடைய மாஸ் ஆக்ஷன் காட்சிகளிலும் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து அப்லாஸை அள்ளுவார்.
ரஜினி படங்களின் தோல்வி படங்கள் கூட பெரிதாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தைக் கொடுக்காது. எப்படியோ தப்பித்துவிடும். ஆனாலும் கமல்ஹாசன் போல வித்தியாசமான நடிப்பையோ, வித்தியாசமான கதைக்களன்களையோ ரஜினியால் கொடுக்க முடியாது என ரசிகர்கள் பலர் சொல்வதும் உண்டு.
ஆனால் இந்த கருத்துக்கு அப்படியே நேர்மாறான கருத்தை பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா தெரிவித்துள்ளார். அதில் “கமல் சிறந்த நடிகர்தான். அவர் பல நல்ல படங்களை நடித்துள்ளார். ஆனால் அவர் அல்பசீனோ என்ற ஹாலிவுட் நடிகரின் தழுவல்… அவரிடம் அந்த தாக்கம் உள்ளது. ஆனால் ரஜினி அப்படி இல்லை. அவர் சுயம்புவாக உருவானவர்.
அவரை பார்த்தால் ஏன் ஒரு வயது கூட குழந்தை கூட தியேட்டரில் உச்சதாண்டவம் ஆடுகிறார்கள் என்றால் அந்த உடலுக்கு கடவுள் கொடுத்துள்ள வரம். அந்த உடல்மொழி வித்தியாசமானது.” எனக் கூறியுள்ளார்.
