முன்னணி நடிகர்களாக இருந்தாலும் கதைக்களம் சரியாக இல்லை என்றால் படம் ஓடாது. அந்த வகையில் தோல்வியடைந்த முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து பார்ப்போம். முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லால் சலாம் படம் தோல்வியை சந்தித்தது.
அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியன் 2 படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ஓரளவு சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது.
அடுத்ததாக முன்னணி இயக்குனரான ஹரி இயக்கத்தில் விஷால் ரத்தினம் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் மேனன், யோகி பாபு உள்ளிட்டார் நடித்தனர். இந்த படமும் தோல்வியை சந்தித்தது.
சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான பத்து தல திரைப்படமும் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், சிவராஜ் குமார், அதிதீபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படமும் தோல்வியை சந்தித்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் ரகுல் ப்ரீத் சிங் ஈஷா கோபிகர் ஆகியோர் நடித்தனர். படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. சூர்யா நடிப்பில் ரிலீசான எதற்கும் துணிந்தவன் படம் தோல்வியடைந்தது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இதே போல கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி ஆகியோர் நடித்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படமும் தோல்வியை சந்தித்தது. மேலும் கார்த்தியின் ஜப்பான், ஜெயம் ரவியின் இறைவன், சைரன் ஆகிய படங்களும் தோல்வியடைந்தது.