விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனைப் போலவே சமீப காலமாக இல்லத்தரசிகளை கடந்து இளம் ரசிகர்களையும் விஜய் டிவி சீரியல் வசீகரித்து வருகிறது.
இதன் காரணமாக சீரியல்களில் நடிக்கக்கூடிய பிரபலங்களுக்கும் அதிக அளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதன்படி விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மான்சி ஜோஷிக்கு தற்போது பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
விஜய் டிவியில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலமாக பிரபலமான பிரஜின் நடித்த அன்புடன் குஷி சீரியலில் அவருக்கு ஜோடியாக மான்சி ஆரம்பத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்த தொடர் ஒளிபரப்பானது. இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலிலும் இவர் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.
தமிழைத் தவிர்த்து கன்னட சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு அவர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மான்சி தனது காதலர் ராகவ் என்பவரை கரம் பிடித்துள்ளார்.
இருவருக்கும் நேற்று பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் பிறந்த மான்சி தன்னுடைய பள்ளிப்படிப்பை பெங்களூரில் தான் முடித்தார். கல்லூரி படிப்பை மங்களூரில் படித்த இவர் சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
சீரியல்களில் மட்டுமல்லாமல் மாடலிங் மற்றும் டிக் டாக் போன்ற செயலிகளிலும் ஆக்டிவாக இருந்த மான்சி தற்போது கன்னடம் மற்றும் தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…