தமிழ் சினிமாவில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவை கொண்டாட கூடிய நடிகராக வளர்ந்த நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான இந்த திரைப்படம் மறைந்த மேயர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
தமிழ்நாட்டில் மட்டுமே இந்த திரைப்படம் எழுவது கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. ஒட்டுமொத்த பட குழுவினரையும் ரசிகர்கள் பாராட்டினர். அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படங்களில் பிஸியாக கமிட் ஆகி நடித்து வருகின்றார். அதன்படி ஏ ஆர் முருகதாஸுடன் மதராசி, சிபி சக்கரவர்த்தியுடன் தன்னுடைய 24 ஆவது படம் மற்றும் சுதா கொங்கராவுடன் தன்னுடைய 25ஆவது படமான பராசக்தி ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். பராசக்தி திரைப்படம் இந்தி எதிர்ப்பு போராட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் பட தீயில் ரவி மோகன் மற்றும் அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது. இப்படியான நிலையில் பராசக்தி திரைப்படத்தில் தன்னுடைய சம்பளத்திற்கு பதிலாக சிவகார்த்திகேயன் வேறு ஒரு முயற்சியை கையாண்டுள்ளார். அதாவது அமரன் படத்தின் வெற்றியாள் சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை 70 கோடிகள் வரை உயர்த்தியுள்ளார். மதராசி திரைப்படம் ரிலீஸ் ஆனால் அவருடைய சம்பளம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இப்படியான நிலையில் தன்னுடைய 25ஆவது படமான பராசக்தி படத்தில் சம்பளத்திற்கு பதிலாக லாபத்தில் கணிசமான சதவீதம் பங்கு கேட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த முடிவுக்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு எப்படியும் சுமார் 150 கோடிகள் வரை பங்காக கிடைக்கும் என சிவகார்த்திகேயன் எதிர்பார்க்கின்றாராம். ஏற்கனவே பாலிவுட் மட்டும் தெலுங்கு சினிமாவில் இதுபோன்ற லாபத்தில் பங்கு கேட்டு பல நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக லாபத்தில் பங்கு கேட்டு சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…