நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை மொத்த நாடும் உற்று நோக்கி காத்திருக்கிறது. திமுக, அதிமுக என்ற இரண்டு மாபெரும் கட்சிகள் இருந்த நிலையில் இந்த முறை தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜயின் கட்சியும் களமிறங்கி இருக்கிறது. இதன்படி 2026 ஆம் வருடம் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் சந்திப்பதற்கு தமிழக வெற்றி கழகம் கட்சி வியூகம் அமைத்து வருகிறது.
கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் தன்னுடைய கழகத்தை வலுப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் முதற்கட்டமாக 100 இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
