தெலுங்கானா மாநிலத்தில் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய காதலன் மற்றும் அவருடைய தம்பியுடன் சேர்ந்து தாயை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. 39 வயதான இவருடைய மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 16 வயதான இவர் 19 வயது மாணவர் ஒருவனை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலை அறிந்த அந்த சிறுமியின் தாயார் அஞ்சலி கண்டித்ததால் கோபமடைந்த அந்த சிறுமி தன்னுடைய காதலன் மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோரோடு சேர்ந்து தன்னுடைய தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பிறகு இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளார்கள். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை ஆனது முன்கூட்டியே திட்டுமிடப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்..
