விண்வெளிக்கு பறந்த மகன்… உணர்ச்சிவசப்பட்டு அழுத சுபன்ஷு சுக்லாவின் தாய்… இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆனி 25, 2025

Spread the love

லக்னோவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா இன்று  ஆக்சியம் மிஷன் -4 இன் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) புறப்பட்டார்.  டிராகன் காப்ஸ்யூலுடன் மூன்று பணியாளர்களுடன் சுபன்ஷு விண்வெளிக்குச் சென்றார். வெற்றிகரமான ஏவுதலால் நாடு முழுவதும் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. இதன் போது சுபன்ஷு சுக்லாவின் தாய் உணர்ச்சிவசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சுபன்ஷு சுக்லா தந்தை ஷம்பு தயாள் கூறுகையில், “என்னுடைய மகனின் சாதனை லக்னோவிற்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

அவர் பணி தொடங்கப்படுவதை கண்டு நாங்கள் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். எங்கள் ஆசீர்வாதங்கள் அவருக்கு உண்டு. அவருடைய பணி சிறப்பாக முடிவடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளார். அவருடைய தாய் ஆஷா கூறுகையில், ” எங்களை பொறுத்தவரை அவன் இன்னும் ஒரு குழந்தை தான். எங்களைப் பொறுத்தவரை அவன் குழந்தைப் பருவத்தில் இருப்பது போலவே என்றும் அப்படியே இருக்கிறான்” என்று கூறியுள்ளார்.