காஞ்சிபுரத்தில் இன்று மக்கள் சந்திப்பில் விஜய் பேசி வருகிறார். அதில், நமக்கு எல்லாமும் கொடுத்த மக்களுக்கு எல்லா நல்லதையும் செய்யணும். அதை சட்டப்பூர்வமாக செய்யணும். அங்கீகாரத்தோடு செய்யணும். அதிகாரப்பூர்வமா செய்யணும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யணும். ஒரே மாதிரி செய்யணும்.
ஒரே எண்ணத்தோடு செய்யணும். அந்த ஒரே இலட்சியத்தோடு தான் அரசியலுக்கு வந்திருக்கோம். குறி வைத்தால் தவற மாட்டேன்.. தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்னு மர்மயோகி படத்துல MGR சொல்லியிருப்பாரு. இது யாருக்கு சொல்றேன்னு புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா நல்லாருக்கும். ஏன்டா இந்த விஜய்ய தொட்டோம். ஏன்டா விஜய் கூட இருக்குற மக்கள தொட்டோம்னு நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ண போறீங்க என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
