அல்லு அர்ஜுனுக்கு பதில் அட்லீயுடன் இணைய வேண்டியது விஜய் தானா?.. கடைசி நேரத்துல இப்படி ஆயிடுச்சே..!

By Nanthini on சித்திரை 12, 2025

Spread the love

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் அட்லீ. ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட் திரை உலகிற்கு நுழைந்த இவர் தற்போது அல்லு அர்ஜுனனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பான அப்டேட் நேற்று வெளியானது. தமிழ் சினிமாவில் வெகு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் வெகுவிரைவில் டாப் இயக்குனராக அட்லி மாறிவிட்டார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி திரைப்படம் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த பட்ஜெட்ல ஒரு படமே எடுத்துடலாம்!.. சம்பளத்தை பல கோடி ஏத்தி  தயாரிப்பாளர்களை அலறவிடும் அட்லீ!...

   

காதல் கதை மூலமாக ரசிகர்களை முதலில் கவர்ந்த அட்லி அடுத்து கமர்சியல் படங்களை கொடுத்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் வைத்தே தெறி, மெர்சல் மற்றும் பிக்கில் என மூன்று படங்களை தொடர்ந்து இயக்கி ஹிட் கொடுத்த இவர் ஷாருக்கான் குறிவைத்து பாலிவுட்டில் களம் இறங்கி ஜவான் படம் மூலமாக மாபெரும் வெற்றியை கொடுத்தார். இந்த படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படியான நிலையில் தற்போது புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் உடன் அட்லி இணைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

   

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Allu Arjun, Atlee  team up for spectacular sci-fi actioner, - kamadenu tamil

 

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கின்றார். இது அல்லு அர்ஜுனின் 22 ஆவது திரைப்படமும் அட்லியின் ஆறாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளனர். அதாவது படத்திற்கு 600 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் அட்லீ இயக்கத்தில் முதலில் இந்த திரைப்படத்தில் விஜய் தான் நடிக்க இருந்தார்.

ஹாலிவுட்டிற்கே சென்ற அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணி... அறிவிப்பு வீடியோவை  வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

அதாவது ஜவான் திரைப்படத்தை முடித்த பிறகு அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் செய்வதற்கு அட்லி ஒப்பந்தம் செய்துள்ளார். விஜயும் நான் அடுத்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தான் டேட் கொடுக்கப் போகிறேன் நீங்க அங்க போய் பேசி இருங்க என்று சொல்லி உள்ளார். அதனைப் போலவே அட்லியும் தன்னுடைய அடுத்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் அக்ரிமென்ட் போட்ட நிலையில் விஜய் கடைசி நேரத்தில் தன்னுடைய பெயரை அதில் குறிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

விஜய்யுடன் அந்த தெலுங்கு நடிகரை சேர்த்து வெச்ச அப்படி படம் எடுக்கிறோம்..  அட்லீயின் பலே பிளான்! - Cinemapettai

பிறகு அட்லி மற்றும் விஜய் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக விஜய் நேரடியாக அரசியலில் களமிறங்க சில தவிர்க்க முடியாத காரணங்களால் அட்லி தற்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்துள்ளார். ஏற்கனவே சர்க்கார் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சில் கலாநிதி மாறன் அடுத்ததாக 3d தயாரிப்பில் ஒரு படம் உருவாகும் என்று கூறியிருந்த நிலையில் அந்தத் திரைப்படம் தான் அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாக இருந்த படம் என்றும் சில காரணங்களால் தற்போது விஜய் அட்லீயுடன் இணைய முடியாததால் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.