மாநகரம் பட நடிகரா இது?.. எலும்பும் தோலுமாக ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. ஷாக்கிங் புகைப்படம்..!

By Nanthini on சித்திரை 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ஹீரோவாக வளர்ந்து நிற்கும் நடிகர்தான் ஸ்ரீராம். ஸ்ரீராம் நடராஜன் என்பதுதான் இவருடைய முழு பெயர். சினிமாவுக்காக ஸ்ரீ என வைத்துக்கொண்டார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார்.

மாநகரம் ஸ்ரீக்கு இன்று பிறந்தநாள்

   

அந்தத் தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 /9 திரைப்படம் தான் இவர் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சோன்பப்படி, வில்லம்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் வில்லம்பு திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து பெயர் வாங்கிக் கொடுத்தது.

   

Vijay TV actor Shri

 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஸ்ரீ நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் நான்கு நாட்களிலேயே தாக்குப் பிடிக்க முடியாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடந்த 2003 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான இறுக்கப்பற்று என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தான் இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ஆகும். அதன் பிறகு ஸ்ரீ நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் நடிகர் ஸ்ரீ எழும்பும் தோலுமாக போஸ் கொடுத்து எடுத்த செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆட்சி என அதிர்ச்சியுடன் கேட்டு வருகிறார்கள். ஒருவேளை அடுத்த படத்திற்காக இவர் உடல் எடையை இப்படி குறைத்து மாறிவிட்டாரா என்றும் கேட்டு வருகின்றனர்.