தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவருடைய புதிய கார் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஊதா நிற lamborghini காரை ஜான்வி கபூரின் நெருங்கிய தோழி பரிசாக வழங்கியுள்ளார். இந்தக் காரின் மதிப்பு சுமார் 5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த உயர் ரக கார் மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தபோது பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. இவ்வளவு விலை உயர்ந்த காரை ஜான்விக்கு பரிசாக வழங்கியது அனன்யா பிர்லா. இவர் பிரபல பாடகி மற்றும் தொழிலதிபராவார்.
அதே சமயம் இவர் குமார் மங்கலம் மற்றும் நீர்ஜா பிர்லாவின் மகள். பிரபல இசை கலைஞரான அனன்யா பிர்லா தொழிலதிபராக பலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம் பீன்ஸ் தயாரித்த தனது முதல் தனி பாடலான லிவிங் தி லைஃப் மூலம் தனது இசை வாழ்க்கையை தொடங்கினார். ஜான்வி கபூர் மற்றும் அனன்யா பிர்லா இருவரும் நீண்ட கால நண்பர்கள். தனது தோழிக்கு 5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த சொகுசு காரை அனன்யா பிர்லா பரிசாக வழங்கியுள்ளார்.
அதே சமயம் அனன்யா பிர்லா விரைவில் ஒரு மேக்கப் பிராண்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதற்கு ஜான்விகபூர் தான் விளம்பர மாடலாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. தன் நிறுவனத்துடன் இணைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த பரிசை அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தனது இசை வாழ்க்கையை தொடங்கிய அனன்யா பிர்லா அழகு சாதன துறையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு மாடலாக ஜான்வி கபூர் இருந்து வருகின்றார்.
தன் அம்மாவைப் போலவே சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜான்வி கபூர் இறுதியாக தேவரா திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது பரம் சுந்தரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏற்கனவே பல கோடி மதிப்பிலான கார் கலெக்சன் களை வைத்திருக்கும் ஜான்வி கபூரின் கலெக்ஷனில் தற்போது இந்த விலை உயர்ந்த லம்போர்கினி காரும் இணைந்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க