பூங்காற்று திரும்புமா சீரியலை தொடர்ந்து விஜய் டிவி களமிறக்கும் புதிய சீரியல்.. வெளியான அப்டேட்..!

By Nanthini on சித்திரை 12, 2025

Spread the love

பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சன் டிவியில் சுமார் 19 சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அடுத்தடுத்த சீரியல்களும் வரிசை கட்டி காத்திருக்கின்றன. இதனை தொடர்ந்து சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சீரியல்களும் புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றன. விஜய் டிவியில் பழைய சீரியல்கள் முடிவதும் புத்தம் புதிய தொடர்கள் களமிறங்குவதும் அதிகமாக உள்ளது.

   

இளசுகளின் வரவேற்பு பெற்ற நீ நான் காதல் சீரியல் விரைவில் முடிவுக்கு வரப் போவதாக கூறப்பட்டது. ஆனால் எப்போது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்தத் தொடர் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் வருவதற்கு முன்பே பூங்காற்று திரும்புமா என்ற புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. முத்தழகு சீரியல் புகழ் நடிகை ஷோபனா தான் இந்த புதிய தொடரில் முக்கியமான நாயகியாக நடிக்க உள்ளார்.

   

Maguva O Maguva - JioHotstar

 

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி Starmaa தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த Maguva O Maguva என்ற சீரியல் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாம். நெஞ்சம் மறப்பதில்லை சீரியலை தயாரித்த Kala Communications தான் இந்த புதிய சீரியலை தயாரிக்க இருக்கிறார்களாம்.  இந்த சீரியல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ள நிலையில் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.