சோசியல் மீடியா மூலமாக தான் அண்ணிய காதலிச்சரே.. அண்ணன் விஜய் சேதுபதியின் காதல் கதையை பகிர்ந்த தங்கை..

By Ranjith Kumar

Updated on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அவர் ஹீரோவாக நடித்த படத்தை விட குணச்சித்திரனாக நடித்து துணை நடிகராக நடித்த படம் தான் அதிகம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம், இவர் இந்திய சினிமாவில் யாரும் பண்ணாத விஷயங்களையும் இறங்கத் தயங்கும் விஷயங்களையும் துளிகூட கண் இக்காமல் முடித்து காட்டும் வல்லமை பெற்றவர் இவர், படத்தில் நடிக்கிறார் என்றாலே அப்படத்தை பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக மக்கள் வருவார்கள், ஏனென்றால் அவர் அவ்வளவு தத்ரூபமாக எளிமையாக மக்களை அணுகும் முறையில் நடித்திருப்பார், அதற்காகவே இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

புதுப்பேட்டை, குள்ளநரி கூட்டம், சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னணிக்கு வந்து ஹீரோவாக தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, சூது கவ்வும் போன்ற மிகச் சிறந்த படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்து மக்கள் செல்வனாகவும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நான் ஒரு ஹீரோ கிடையாது நான் ஒரு நடிகன் என்று ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல படங்களில் கதைக்குத் தேவையான கதாபாத்திரமாகவும் ஏன் கதையின் வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவையே கைக்குள் வைத்திருப்பவர் இவர்.

   

சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் விஜய் சேதுபதி தங்கையான ஜெயஸ்ரீ அவர்கள் விஜய் சேதுபதி பற்றி சில சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து உள்ளார், நீங்களும் உங்க அண்ணனும் காதல் திருமணம் தானே அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, ஜெயா ஸ்ரீ அவர்கள், எங்க அண்ணா துபாயில் இருக்கும்போது யோகோ இணையதளத்தின் மூலம் தான் எங்க அண்ணி கிட்ட பேசி காதலிச்சு இருக்காங்க, ஆனா எங்க அண்ணன் முதல்ல அண்ணி நேர்ல பார்க்கல நான் தான் பார்த்தேன், எங்க அண்ணன லவ் பண்ணதுக்கு அப்புறம் என்ன பாக்குறதுக்காக கோயம்புத்தூர் வந்தாங்க, ஆனா ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ண நால நான் எதுவும் பேசிக்கல, எங்க அண்ணன் கேட்டா எப்படி ஓகே வானு? ஓகே பரவால்லன்னு சொல்லி சொன்னேன்.

ஏன்னா எங்க அண்ணன் கூட பங்கு போட்டுக்க ஒருத்தங்க வந்துட்டாங்கன்னு தோணுச்சு அதனால, ஆனா கோவம் பெருசா இல்ல, பொம்பள புள்ள பொறக்கும் போது தான் கோவம் வந்துச்சு, இனி என்ன பாப்பானு கூப்பிட மாட்டான், இனிமே அவனோட குழந்தை தான் பாப்பான்னு கூப்பிடுவான், அதனால கோவம் வந்துச்சு. அந்நிய முதல்ல பாக்கும்போது படத்துல வர மாதிரி ரொம்ப வில்லியா இருப்பாங்க நெனச்சேன் ஆனா அவங்க ரொம்ப ஸ்வீட் ஆ தான் இருக்காங்க, ஆனா அவங்க ரொம்ப கூல் பர்சன். என்று விஜய் சேதுபதியின் மனைவியைப் பற்றி அவர்கள் தங்கை நல்ல சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

author avatar
Ranjith Kumar