நான் வாந்தி எடுத்ததையே என்னை சாப்பிட சொல்கிறீர்களா… கோபப்பட்டு வெளியேறிய இளையராஜா- அப்படி என்ன சொன்னார் அந்த இயக்குனர்?

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் காதல் சினிமாக்களின் பொற்காலமாக அமைந்தது 90கள் தான் என்றால் அது மிகையாகாது. இளம் நடிகர்களான அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, பிரபுதேவா உள்ளிட்டவர்கள் காதல் கதைகளில் நடித்துதான் தங்களை முன்னணி நடிகர்களாக வளர்த்துக் கொண்டனர்.

அப்படி காதலை மையமாகக் கொண்டு 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான் தினம்தோறும். இந்த படத்தில் முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன், ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நாகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதனால் படத்தின் இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் என்றே அழைக்கப்பட்டார்.

   

ஆனால் அதன் பிறகு பல வருடங்களாக அவர் படமே இயக்கவில்லை. 2013 ஆம் ஆம் ஆண்டு மத்தாப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் பெரிதாக போகவில்லை. குடிப்பழக்கம் காரணமாக தன்னுடைய கேரியரை தானே கெடுத்துக் கொண்டதாக அவரே உண்மையைப் பேசியுள்ளார்.

இந்நிலையில் இளையராஜாவின் தீவிர ரசிகரான நாகராஜ் அவருக்கும் தனக்கும் இடையே நடந்த சந்திப்பின் போது அவர் தன் மேல் கோபப்பட்டதை கூறியுள்ளார். ஆகாயம் என்ற திரைப்படத்தை முரளியை வைத்து இயக்க ஒப்பந்தமான நாகராஜ் இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இருவரும் பாடல் கம்போசிங்குக்காக அமரும் போது சில ட்யூன்களைப் போட்டுக்கொடுத்துள்ளார். ட்யூன்கள் எப்படி இருக்கிறது என்ற அவரிடம் இளையராஜா கேட்க ட்யூன்களில் திருப்தியுராத நாகராஜ் ‘சார் உங்களின் பாடலான என்னை தாலாட்ட வருவாளா போல ஒரு ட்யூன் வேண்டும்’ எனக் கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு கோபமான இளையராஜா “நான் வாந்தி எடுத்ததையே என்னை சாப்பிட சொல்கிறீர்களா’ எனக் கேட்டு எழுந்து சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்த நாகராஜ் “சார் உங்க பாடலைதானே சொன்னேன்” எனக் கூறியுள்ளார். அவருக்கு பதிலளித்த இளையராஜா “அது என் பாடல் இல்லை. நான் இசையமைக்கும் வரைதான், அது என் பாடல். அதன் பிறகு அது உங்கள் பாடல் “ என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.

அதன் பிறகு கொஞ்சம் நேரம் கழித்து சமாதானம் ஆன இசைஞானி மேலும் சில ட்யூன்களை போட்டுக்கொடுத்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை என்பதுதான் சோகம்.

author avatar