மேடையில் பாடிக் கொண்டிருக்கும் பொழுதே… ரசிகரை தாக்கி போனை பிடுங்கி தூக்கி எறிந்த பிரபல பாடகர்.. வீடியோவால் வைரலானதால் வெடித்த சர்ச்சை…

By Begam

Updated on:

தமிழ், ஹிந்தி மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி பிரபல பின்னணி பாடகராக  வலம் வந்தவர் உதித் நாராயணன். இவரது மகனான ஆதித்ய நாராயணனும்  பிரபல பாடகராக திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார். ஹிந்தியில் பல பாடல்களை பாடியுள்ளார். நடிகராகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

   

இவரின் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் உள்ள ருங்டா கல்லூரியில் பாடகர் ஆதித்ய நாரயணின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஷாருக்கானின் ‘டான்’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ‘ஆஜ் கி ராத்’ பாடலை ஆதித்ய நாராயண் பாடிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கோபமடைந்த அவர், ரசிகர் ஒருவரை நோக்கிச் சென்று தனது கையில் இருந்த மைக்கால் ரசிகரின் கையில் அடித்து, அவரிடமிருந்த செல்ஃபோனை பிடுங்கி  தூக்கி எறிந்தார்.  இதனைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் அவர் பாடிக்கொண்டே எதுவும் நடக்காதது போல அந்த இடத்தை விட்டு சென்றார்.

 

பாடகர் ஆதித்ய நாராயணனின் இந்த செயலை அங்கிருந்த ரசிகர்கள் வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகின்றனர். இதனை பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

author avatar