விஜய் சேதுபதிக்கு சாப்பிட்டுக்கூட காசு இல்ல… ஆனா அவங்க காதலி தான் எல்லாமே கொடுத்தாங்க… பழையதை நினைவுகூர்ந்த பிரபலம்..!

By Soundarya on மார்கழி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர்,  நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, 96, கருப்பன், விக்ரம் வேதா போன்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் விஜய் சேதுபதி.

   

மற்ற நடிகர்கள் போல் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லன் தோற்றத்திலும் வயதான தோற்றத்திலும் கேமியோ தோற்றத்திலும் என பல படங்களில் நடித்து தனித்துவமான புகழை பெற்றவர் விஜய் சேதுபதி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான், விஜய் சேதுபதி சினிமாவில் வருவதற்கு முன்பு சென்னையில் ஒரு வங்கியில் வேலை செய்து வந்தார்.

   

 

அவர் மனைவி ஜெஸ்ஸியும் அங்கே தான் வேலை பார்த்து வந்தார். ஒரு நண்பரின் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் போனிலேயே டேட்டிங்க் செய்து வந்துள்ளனர். விஜய் சேதுபதி BE பட்டதாரி. கொஞ்ச நாட்களில் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் விஜய் சேதுபதி.

அப்போ அவரு கையில பைஸாவே கிடையாது. ஒரு அன்னக்காவடியா இருந்தாரு. அவர் காதலியான மனைவி தான் சாப்பாடு போட்டாங்க. அந்த சமயத்துல தான் ரெண்டு பேரும் திருமணம் செஞ்சிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நடிப்புல முன்னேறி இப்போ விஜய்,ரஜினிக்கு இணையான ஒரு இடத்தை புடிச்சிட்ட்டாரு விஜய் சேதுபதி என்று கூறியுள்ளார்.