எம்ஜிஆர் என்ற பெயரை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியல் சினிமா என இரண்டு துறைகளிலும் தனக்கென தனி பாதை வகுத்து அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர். பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே ஆக்சன் காட்சிகள் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.
தான்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நல்ல மனிதர் மட்டும் அல்ல உதவும் மனப்பான்மை கொண்டவர் வாரி வழங்கும் வள்ளல் தன்னை தேடி வந்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர். தான் மட்டுமல்லாது தன்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவர். தன் கண்ணாலே யாராவது வறுமையில் வாடுவதை பார்த்தால் அவர்களுக்கு ஓடோடி உதவி செய்வார். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.

எம்ஜிஆர் நடித்த படகோட்டி படத்தின் கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் கேரளாவில் படமாக்கப்பட்டது. அப்போது ஒரு மண் குடிசையின் முன் நின்று எம்ஜிஆர் பாடும்படி படமாக்கப்பட்டது. அதில் ஒரு முதியவர் சுருட்டு பிடித்துக் கொண்டு இருப்பார். அது அந்த முதியவரின் வீடு தான். ஷாட் முடிந்தவுடன் எம்ஜிஆர் அந்த முதியவரிடம் வீட்டை ஏன் இப்படி வச்சிருக்கீங்க என்று கேட்கும் போது என்கிட்ட பணம் இல்லையா ஒரு 500 ரூபாய் இருந்தா வீட்டை பராமரிச்சு சரி பண்ணிடுவேன் என்று கூறியிருக்கிறார். உடனே தனது உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் அந்த முதியவருக்கு ஆயிரம் ரூபாயை கொடுத்து வீட்டை சரி செய்ய சொல்லி உதவினார். அப்படி வறுமையில் வாடுபவர்களுக்கு எல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்து உதவியவர் எம்ஜிஆர்.
