பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரேஷ்மா தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஓவர் நைட்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இவருடைய புஷ்பா கதாபாத்திரம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.

இதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ரேஷ்மா விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இளைஞர்களை கவர்ந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சீரியல் வாய்ப்பு கிடைத்த நிலையில் சின்னத்திரை நுழைந்தார். அதன்படி விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி தற்போது மக்களின் ஃபேவரட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் பயணித்து வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதேசமயம் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு சில பிரச்சனைகள் இருந்ததால் திடீரென்று உடல் எடை கூடி விட்டதாகவும் அதன் பிறகு உடற்பயிற்சி செய்து சுமார் 12 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளதாகவும் ரேஷ்மா கூறியுள்ளார்.

மேலும் படப்பிடிப்பு இல்லை என்றால் எந்நேரமும் ஜிம்மில் தான் இருப்பேன். ஒன்பது மாதமாக பல விஷயத்தை சாப்பிடாமல் தவிர்த்து வந்திருக்கிறேன். முக்கியமா சர்க்கரை. அதனால்தான் என்னால் 12 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடிந்தது என்று ரேஷ்மா கூறியுள்ளார்.
