தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் சிறப்பு கதாபாத்திரம் என சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று அற்புதமாக நடிக்க கூடிய திறமை கொண்டவர். மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு இனிமேல் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக விஜய் சேதுபதி கூறி இருந்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக விடுதலை 2 திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ட்ரெயின் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இதனைத் தவிர விஜய் சேதுபதியின் கைவசம் மூன்று திரைப்படங்கள் இருப்பதால் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் சமீபத்தில் இவர் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். இப்படியான நிலையில் விஜய் சேதுபதியின் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது அவருடைய அடுத்த படத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை இவர் இறுதியாக இயக்கி இருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி அதன் பிறகு காளி என்ற திரைப்படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் ஒன்றையும் இயக்கி இருந்தார். இறுதியாக இவருடைய இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்தியா மேனன் ஆகியோர் நடித்திருந்த நிலையில் இந்தத் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்படியான நிலையில் விஜய் சேதுபதியை வைத்து இவர் சாதாரண கதை களத்தில் தன்னுடைய புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.