தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் லண்டனில் நடைபெற்ற வரும் நிலையில் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்தாலும் அதற்கான படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கவில்லை.
நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் பேட்டைக்காரன் படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்த படத்தை முடித்த பிறகு தான் வாடிவாசல் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதன் காரணமாக தற்போது மற்றொரு மாஸ் படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார். கே ஜி எஃப் திரைப்படத்தை மையமாக வைத்து வெற்றிமாறன் அந்த படத்தை எடுக்க உள்ளாராம். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் விடுதலை படத்தை தயாரித்த எல் ரெட் குமார் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் வெற்றிமாறன் நடித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், நான் 13 வயதில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போது ஆரம்பித்து 33 வயது வரை பிடித்திருக்கிறேன். எக்கச்சக்கமாக சிகரெட் பிடிப்பேன். ஒரு நாளைக்கு 150 முதல் 150 சிகரெட்கள் வரை பிடித்து வந்தேன். இப்படி இருந்த நான் ஒரு படம் பார்த்த பிறகு சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்.
அதாவது சூர்யாவின் மரணம் ஆயிரம் திரைப்படத்தை பார்த்த பிறகு நான் அப்படியே சிகரெட் பிடிப்பதை நிறுத்தினேன். என் கூட படம் பார்த்த எல்லோரும் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கல, அதே மாதிரி என் கூட படம் பார்த்த எல்லோரும் சிகரெட் பிடிப்பதை விடவில்லை. ஒவ்வொருவருக்கும் அவங்க அவங்க உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதுபடி தான் செயல்படுவாங்க. படம் பார்த்து முடித்து வந்து அடுத்த நாளே சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை நான் சிகரெட்டை தொடவே இல்லை. சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என வெற்றிமாறன் பேசியுள்ளார்.