தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய நடிகர் தான் மணிவண்ணன். இன்னும் சில காலம் அவர் நம்முடன் இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்க கூடிய அளவுக்கு மணிவண்ணன் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். 1983 ஆம் ஆண்டு ஜோதி என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான மணிவண்ணன் அதன்பிறகு 1984 ஆம் ஆண்டு நூறாவது நாள் என்ற சூப்பர் படத்தை இயக்கிய தமிழ் சினிமாவை தன் பக்கம் திருப்பினார்.

இயக்கம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அசத்தியவர் தான் மணிவண்ணன். 1989 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான கொடி பறக்குது என்ற ஒரு படத்தில் வில்லனாகவும் நடித்து அனைவரையும் அசர வைத்தார். 1994 ஆம் ஆண்டு வெளியான அமைதிப்படை என்ற ஒரு அரசியல் படம் மூலம் தன்னுடைய அரசியல் ஞானத்தையும் மணிவண்ணன் காட்டி இருந்தார். 2013 ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மணிவண்ணனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார்.

இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்த மணிவண்ணனுக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவருடைய மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் நடிகர் விக்ராந்த் நடித்த கோரிப்பாளையம் திரைப்படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார். கடந்த 2002 ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்யராஜுக்கு மகனாக நடித்திருப்பார்.

இவர் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் வெளியான நூறாவது நாள் திரைப்படத்தை மீண்டும் இயக்கி இருந்தார். தற்போது அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது மணிவண்ணன் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் அட மணிவண்ணனின் மகன் இவர்தானா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
