கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் மிஸ்கின். முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றார். இந்தத் திரைப்படத்திற்காக மிஷ்கினுக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் வழங்கப்பட்டது. தன்னுடைய முதல் படத்தில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிஸ்கினுக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. அதனால் அவருடைய அடுத்த படமான அஞ்சாதே படத்திலும் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்த அவர் தவறவில்லை.

அடுத்தடுத்து இவருடைய இயக்கத்தில் வெளியான நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் மற்றும் சைக்கோ ஆகிய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் ட்ரெயின். கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மிஸ்கின் இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். மிஸ்கின் ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு ஏற்படும். தற்போது அவர் டிராகன் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் மிஸ்கின் சமீபத்தில் டிராகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு நடிகையின் புகைப்படம் ஸ்கிரீனில் ஒளிபரப்பப்பட்டது.

அதனைப் பார்த்ததும் மிஸ்கின் இந்த நடிகை ரொம்ப அழகா இருந்ததால் என்னுடைய படத்துக்கு நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என கூறினார். அந்த நடிகையும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில் சாரிமா நான் அப்படி சொன்னதுக்கு என்று சொல்லி இருந்தார். அவ்வளவு அழகாக இருந்து மிஸ்கின் நிராகரித்த அந்த நடிகை வேறு யாருமில்லை தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ள நடிகை கயாது லோஹர் தான்.
