நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று பெயர் பெற்ற நடிகை பானுமதி தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் என்றால் அதற்கு காரணம் ஸ்வர்க்க சீமா என்ற படத்தின் வெற்றி. அந்தப் படத்தில் பானுமதியை நடிக்க ஒப்புக் கொள்வதற்கு அப்படத்தின் இயக்குனரான பி.என் ரெட்டி படாத பாடு பட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களிலும் நடிக்க கூடாது பாடல் கச்சேரிகளிலும் பங்கேற்கக் கூடாது என நிபந்தனையோடு தான் தனது காதல் கணவர் ராமகிருஷ்ணாவை கரம் பிடித்தார் பானுமதி. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதற்காக பானுமதியை தேடி பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் அதில் எந்த வாய்ப்பையும் பானுமதி ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்படிப்பட்ட சூழலில் தான் ஸ்வர்க்கசீமா திரைப்படத்தில் நடிப்பதற்காக பிஎன் ரெட்டி பானுமதியை அணுகினார். ஆனால் பானுமதி பலமுறை வாய்ப்பை மறுத்தும் ரெட்டி அவரை விடுவதாக இல்லை. அதற்கு காரணம் படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரம் ஒரு நாடக நடிகையின் கதாபாத்திரமாகும். இதனால் பானுமதியின் கணவரிடம் பேசி சம்மதம் வாங்க முடிவு செய்தார் பி என் ரெட்டி. பானுமதி ஒரு மிகச்சிறந்த நடிகை அவரை வீட்டிற்குள் பொத்தி பொத்தி வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம். அவங்க மிகப்பெரிய புகழை அடை வாங்க என்று உங்களுக்கு பொறாமை.
அதனால்தான் நீங்க அவங்களை நடிக்க அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று பி என் ரெட்டி ராமகிருஷ்ணாவை பார்த்து குற்றம் சாட்டினார். அதன் பிறகு ஆடி போன ராமகிருஷ்ணா உடனே பானுமதி இடம் சென்று உனக்கு படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டுள்ளார். எனக்கு துணி கூட விருப்பமில்லை நீங்க நடிக்க சொன்னா நடிக்கிறேன் என்று பானுமதி கூறியுள்ளார். அதன் பிறகு தான் பானுமதி ஸ்வர்க்க சீமா திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பானுமதி தொடர்ந்து நடிக்க வேண்டும் என ராமகிருஷ்ணாவும் முடிவு செய்த நிலையில் தங்களுக்கு ஒரு மகனும் பிறந்ததால் பானுமதி தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவை கலக்கினார்.
